என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காய்ச்சல் பாதிப்பு"
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சுற்றி ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. அதாவது வி.சித்தூர், செங்குளத்துப்பட்டி, காணப் பாடி, மோர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராள மானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர்.
இவர்களுக்கு மழை பெய் தால்தான் வேலை கிடைக்கும். இல்லையென்றால் கூலி தொழிலை நம்பிதான் பிழைப்பு நடத்துகின்றனர். கடந்த சில நாட்களாக மோர்பட்டி பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்த காய்ச்சல் கண்டவர்கள் உடல் சோர்வுடன் கைகால் வலியுடன் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் ஒரே கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்கு வீடு காய்ச்சல் பாதிப்பு இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லும் அளவுக்கு மர்ம காய்ச்சல் கிராமத்தை ஆட்டுவிக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரிவாடன்செட்டிபட்டியைச் சேர்ந்த மின் ஊழியர் நடராஜன் என்பவர் மர்ம காய்ச்சலுக்கு இறந்துள்ளார். இந்த தகவலை அறிந்த மோர்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்ற பீதியில் உள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், மோர்பட்டியில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியபடி காணப்படுகிறது. இதனால் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. சாக்கடை போல் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிகாரிகளின் மெத்தனத்தால் எங்களது கிராமங்களில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், மதுரை, நெல்லை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரு சில மாவட்டங்களில் பன்றி காய்ச்சலும் பரவி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு விதமான வைரஸ் கிருமிகளும் பரவிவருவதால் அதனை தடுக்க தமிழக சுகாதாரத்துறை அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
சென்னையில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டயர், பழைய கழிவுகள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் தடுப்பு நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் கூட காய்ச்சலால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறைக்கு தகவல் வந்துள்ளது.
சென்னையில் 4 அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமே 250 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 45 பேர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் 3 பேருக்கு டெங்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு 50 படுக்கை வசதியுடன் 2 வார்டு தயாராக இருப்பதாகவும், டெங்குவினால் பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், நர்சுகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இன்று வரை 53 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 27 பேர் பெரியவர்கள், 26 பேர் குழந்தைகள் ஆவர். இதுதவிர 5 பேருக்கு டெங்கு ‘பாசிட்டிவ்’ இருப்பதால் அவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது:-
கடந்த வருடத்தை ஒப்பிடும் போது தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. காய்ச்சல் வார்டில் நோயாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கிறோம். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்படும் என்பதால் ‘கஞ்சியும்’ வழங்கப்படுகிறது. வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு முகமுடி வினியோகிக்கப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியாக வார்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் தடுப்பூசி 700 பேருக்கு போடப்பட்டு உள்ளது. தேவையான அளவு தடுப்பூசி மற்றும் மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 47 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு பாதிக்கப்பட்ட 31 குழந்தைகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை இயக்குனர் அரசர் சீராளர் தெரிவித்தார்.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் காரணமாக 112 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் திருவள்ளூரை அடுத்த புஞ்சி ரெட்டி பள்ளியை சேர்ந்த ரெதீசன் (17), விளாம்பாக்கத்தை சேர்ந்த பொன்னுரங்கம் (30), செம்பேட்டை சேர்ந்த மகேஷ் (27), சீற்றம்பாக்கத்தை சேர்ந்த் காயத்ரி (18), திருவள்ளூர் ராஜாஜி புரத்தை சேர்ந்த் நிஷாந்த் (8) ஆகிய 5 பேரின் ரத்த மாதிரியை சோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து 5 பேரையும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் சிகிச்சைக்காக பலர் குவிந்த வண்ணம் உள்ளனர். #DengueFever #Swineflu
கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-
எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சையை டாக்டர்கள் அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரள மாநிலத்தில் எலி காய்ச்சல் பரவி வருவதால், கேரளாவை ஒட்டி உள்ள கோவையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் வரும் பொதுமக்கள், அலட்சியமாக இருக்காமல் , சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் . எலிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து , பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்